Rape என்றால் கற்பழிப்பு அல்ல!

 

Photo by Soroush Karimi on Unsplash

எப்போதெல்லாம் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் காட்சி வருகிறதோ அப்போதெல்லாம் திரைப்படம்/தொலைக்காட்சியில் அதிகமாக உபயோகிக்க

ஏன்?

காரணம் ஒன்று
திறமையற்ற எழுத்தாளர்களிடம்/ஊழியர்களிடம் பொறுப்புள்ள வேலையை கொடுப்பது.

காரணம் இரண்டு
ஆழ்மனத்தில் ஆங்காங்கே ஒளிந்து கிடக்கும் ஆணாதிக்கக் கண்ணோட்டம்.

"கற்பு" என்றால் என்ன?
திருமணமாகாத பெண்/ஆண் ஒருபோதும் உடலுறவு கொள்ளாமல் இருக்கும் கன்னித் தன்மை மற்றும் திருமணம் ஆன பெண்/ஆண் ஒரு துணையுடன் மட்டும் உடலுறவு கொள்ளும் கோட்பாடு "கற்பு" என சமூகத்தால் கருதப்படுகிறது.

பிடிவாத புராண கோட்பாடுகளின் ஒரு சாராம்சமாக கற்பு + கன்னித்தன்மை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

"கன்னித்தன்மை" என்பது பெண்ணின் ஒழுக்கத்தை பகுப்பாய்வு செய்யும் அளவுகோலாக ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவர்களால் உபயோகிக்கப்படும் ஒரு கருவி.

"கற்பு" என்ற சொல்லுக்கு பாலின சார்பு இல்லை என்றாலும், பிற்போக்கு சிந்தனையின் வெளிப்பாடாக "கற்பு" என்றால் அது பெண்ணை மட்டும் குறிக்கும் என்ற தவறான நம்பிக்கை இன்றும் நடைமுறையில் உள்ளது. இதுதான் இந்த வார்த்தையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை.

"கற்பழிப்பு" என்றால் என்ன?

கற்பு + அழிப்பு = கற்பழிப்பு

Rape ≄ கற்பழிப்பு

Rape என்றால் கற்பழிப்பு அல்ல! 

Rape என்பது ஒருவரின் கற்பு + கன்னித்தன்மை க்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறிப்பது அல்ல. மாறாக, Rape என்பது ஒரு நபரின் அனுமதியின்றி அவரின் மேல் மேற்கொள்ளப்படும் பாலியல் கொடுமையை குறிப்பது.

Rape/Sexual Assault என்பது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம், இதில் பாலின பாகுபாடுகள் கிடையாது.

செய்தி/திரை ஊடகம் ஜனரஞ்சகமாக "கற்பழிப்பு" என்ற சொல்லை தொடந்து பயன்படுத்தும் போது, பாலியல் வன்கொடுமை பற்றிய அறியாமை மக்களின் மனதில் மேலும் வலுப்படுத்துகிறது. முக்கியமாக வாலிபர்களின் சிந்தனை வழியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த தவறான சித்தரிப்பை தடுக்கவும், Rape/Sexual Assault பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ளவும், "கற்பழிப்பு" என்ற வார்த்தையின் உபயோகத்தை குறைத்து, அதற்கு மாறாக "பாலியல் பலாத்காரம்" என்ற வார்த்தையை பயன்படுத்துவது நல்லது.

இதன் மூலம் Rape/Sexual Assault என்பது பெண்ணின் பிரச்னை என்ற கண்ணோட்டத்தில் இருந்து ஒரு பொது பிரச்னையாக கவனிக்கப்படும் என நான் நம்புகிறேன்.

அது ஜனநாயக சிந்தனைக்கும், சமத்துவ சமுதாய முன்னேற்றத்திற்கும் நல்லது.
Previous Post Next Post

Contact Form