Virtue Signaling என்பது ஒரு தனிநபர்/குழு தமது சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் அல்லது கொள்கைகளை அவர்களின் தார்மீக தரங்களை (Moral standards) மற்றவர்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தும் செயல். பொதுவாக மற்றவர்களின் அங்கீகாரம் அல்லது பாராட்டுகளைப் பெறுவதற்காக யாரேனும் இதைச் செய்வார்கள்.
தார்மீக தரங்களை உபயோகித்து தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் நபர்கள்/குழுக்களை விமர்சிக்க Virtue Signaling என்ற சொற்றொடர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
'Virtue Signaling' எப்படி அடையாளம் காண்பது?
Virtue Signaling பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி அடையாளம் காண முடியும்.
அவற்றில் சில:
- பிரபலமான அரசியல்/சமூக நீதி கொள்கைகளை சுயலாப நோக்கத்திற்காக சமூக ஊடகங்களில் பகிர்தல்.
- ஒரு குறிப்பிட்ட குழு/சித்தாந்தத்திற்கு ஆதரவாக சுயலாப நோக்கத்துடன் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது.
- சுயலாபத்திற்காக பிரபலமான பிரச்சினைகளை மட்டும் சமூக ஊடகங்களில் கண்டித்தல், etc.
தனிநபர்கள், அரசியல் கட்சிகள் அல்லது பெருநிறுவனங்கள் உட்பட யார் வேண்டுமானாலும் Virtue Signaling செய்யலாம்.
Virtue Signaling, ஏதாவது நன்மை உண்டா இல்லையா?
இருக்கு ஆனால் இல்லை.
சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், நேர்மறையான கலாச்சார மாற்றத்தை முன்னெடுப்பதற்கும் இது ஒரு சக்திவாய்ந்த கருவி என்று Virtue Signaling ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
இருப்பினும், Virtue Signaling எப்போதும் நேர்மையானதாக இருக்காது. காரணம், பெரும்பாலான நேரங்களில் Virtue Signaling சமூக முன்னேற்றத்திற்கு உபயோகிப்பதற்கு பதிலாக ஒரு தனிநபர்/அமைப்பினால் சுயலாப நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
Tags:
Tamil