"பெரிய திரை எப்போதும் சிறிய திரையை வெல்லும்"
COVID லாக்டவுன் ஹாலிவுட் ஸ்டுடியோக்களை திரையரங்குகளில் வெளியிடாமல் பல திரைப்படங்களை OTT தளங்களில் வெளியிடச் செய்தது. இந்த முடிவு திரைத்துறையினரை மிகவும் பாதித்தது.
The Dark Knight புகழ் கிறிஸ்டோபர் நோலன் கூட Warner Bros ஸ்டுடியோவில் இருந்து வெளியேறினார் (கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு).
காரணம்:
“Many in the industry expected Nolan to leave Warner Bros. after he publicly condemned his longtime studio for pushing their entire 2021 film slate to a hybrid release model in which titles debut in theaters on the same day they become available to stream on HBO Max for 31 days.” — YahooNews
OTTயினால் சினிமாவை வெல்ல முடியாது
சினிமா என்பது உங்கள் அன்புக்குரியவர்களுடன் உணவகத்திற்குச் செல்வது போன்ற ஒரு "அனுபவம்". ஒவ்வொருவருக்கும் தங்கள் வீட்டில் சமையலறை உள்ளது மற்றும் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்கிறார்கள், இருப்பினும், ஒரு உணவகத்திற்குச் செல்வது ஒரு "கூட்டு அனுபவம்". சினிமாவுக்கும் அப்படித்தான்.
OTT சினிமா அனுபவத்திற்கு தீங்கு விளைவிக்குமா?
இந்த கேள்வி எனக்கு தோன்றிய போது... திரைத்துறையினரின் டிஜிட்டல் கேமராவை பற்றிய முந்தைய பீதி எனக்கு நினைவிற்கு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டிஜிட்டல் கேமராக்கள் வெளிவந்த புதிதில் திரைத்துறையினரின் இரண்டு குழுக்களாக பிரிந்தனர்:
- பிலிம் (Film) கேமரா
- டிஜிட்டல் கேமரா
பிலிம் vs டிஜிட்டல்
பிலிம் vs டிஜிட்டல் விவாதங்கள் இன்னும் உள்ளன என்றாலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள பல இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கர்ஸ் குறைந்த வளங்களுடன் திரைப்படங்களை உருவாக்க அனுமதித்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கர்ஸ் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்று, தமது திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது. காரணம், எல்லா திரையரங்குகளையும் பெரிய ஸ்டுடியோக்கள் கைப்பற்றியிருப்பது.
எனது பார்வையில், OTT ஒரு நல்ல திரைப்படத்தைக் உருவாக்கிய அனைவருக்கும் அதை பல்வேறு தரப்பினருக்கு வெளியிடுவதற்கான ஒரு தளத்தை வழங்கியுள்ளது. இது திரையுலகினருக்கு சிறந்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்.
COVIDன் போது, வெளியே செல்ல தடைகள் இருந்ததால், மக்களின் முதல் தேர்வாக OTT மாறியது. இதன் விளைவாக, ஸ்டுடியோக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் வருமானத்தை அதிகரித்து கொண்டனர்.
இருப்பினும், ஒரு திரைப்பட ஸ்டுடியோ நீண்ட காலத்திற்கு லாபகரமாக இருக்க OTTஐ மட்டுமே நம்பியிருப்பது நடைமுறையான வணிகத் திட்டம் அல்ல.
டிவிக்கு ஏன் ஆபத்து?
பாரம்பரிய கேபிள் டிவிக்கு மாற்றாக OTT சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, சினிமா தியேட்டர்களுக்கு மாற்றாக அல்ல. எனவே, சினிமாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, டிவிக்கு தான் ஆபத்து.
OTT என்பது, நீங்கள் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை வீட்டிலேயே பார்க்கலாம், ஆனால் பார்வையாளர்கள் அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்கள்.
பாரம்பரிய கேபிள் டிவியில் அது நேர்மாறானது, உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை வீட்டிலேயே பார்க்கலாம், ஆனால் நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளின் மீது டிவி ஸ்டுடியோக்கள் அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்.
டிவி பார்ப்பது ஒரு தனிப்பட்ட அனுபவம், OTTயும் அதே போலத்தான். ஆனால் தியேட்டரில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது ஓய்வுக்காக அல்ல; மாறாக, இது ஒரு "பொது அனுபவம்".
OTT vs டிவி என்பது யார்கையில் அதிக கட்டுப்பாடு உள்ளது பற்றியது
OTT தங்களின் பார்வையாளர்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளையும் மற்றும் பார்க்கும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. மறுபுறம், பார்வையாளர்கள் டிவிக்கு முன்னால் எப்போது இருக்க வேண்டும் என்று கேபிள் சேனல்கள் தீர்மானிக்கின்றன.
ஒருமுறை பார்வையாளர்கள் அவர்களின் தேர்வு சுதந்திரத்தை உணர்ந்த பின் பழைய வழக்கத்திற்கு திரும்ப விரும்ப மாட்டார்கள், அது அர்த்தமற்றது.
இணையதள வேகம் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது, இணையதளத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆதலால், பாரம்பரிய கேபிள் சேனல்கள் விரைவில் முழுமையாக OTTயால் மாற்றப்படும். அது தவிர்க்க முடியாதது.
மொத்தத்தில், சர்வதேச அளவில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை விநியோகிக்கும்போது OTT என்பது பாரம்பரிய கேபிள் சேனல்களை விட திறமையான வணிக மாதிரியாகும்.
"OTT மற்றும் கேபிள் சேனல்கள் இடையேயான போர் முடிவடைந்து, அதில் OTT வெற்றியும் பெற்றுள்ளது."