The Entity ஏன் Ethanனை உயிர்வாழ அனுமதித்தது?


முதல் 30 நிமிடங்கள் முழுவதும், The Entity மற்றும் அதன் கடவுளுக்கு நிகரான சக்திகள் பற்றிய கான்செப்ட் மீண்டும் மீண்டும் பல காட்சிகளில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசாங்கங்களும் The Entityஐ தமது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள்.

கடவுளுக்கு நிகரான The Entityஇன் சக்திகள் மனிதர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டாலும், மனித குலத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் The Entity மூலம் அல்ல, மாறாக மனிதர்களே என்பதை திரைக்கதை தெளிவுபடுத்துகிறது. 

The Entityஇன் சக்திகளை Ethan புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் The Entityனால் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அவர் நன்கு அறிவார்.

AI (artificial intelligence) இடம் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பதை விட மனித தலையீட்டிலிருந்து கடவுளுக்கு நிகரான AIஇன் சக்தியைப் பாதுகாப்பதே Ethanஇன் பிரதான நோக்கம்.  

உதாரணமாக, Avengers: Age of Ultron திரைப்படத்தில், Ultron மனித வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்ட பின்னர், அதன் முதல் எண்ணம் மனிதகுலத்தை அழிக்க வேண்டும் என்பது.

எவ்வாறாயினும், இந்தச் சூழ்நிலையில், The Entity மனித வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்ட பின்னர், மனிதர்கள் அதன் சக்தியைப் உபயோகித்து உலகத்தை அழிவு பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முன் The Entity தன்னைத்தானே அழிக்க முடிவு செய்திருக்கலாம்.

Ethan மட்டுமே இந்த சாத்தியமற்ற மிஷனை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஒரே நபர், அதனால்தான் Ethan சரியான தேர்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய Gabrielலை ஒரு கருவியாக The Entity பயன்படுத்திருக்கலாம். அதனால்தான் ‘The Entity’ இன் பிரதான நோக்கம் Ethan Hunt ஐ வெற்றியடைய செய்வது என நான் கருதுகிறேன்.

இருப்பினும், எழுத்தாளர்கள் The Entityக்கு என்ன முடிவு உருவாக்கினார்கள் என்பதை Mission Impossible: Dead Reckoning - பகுதி இரண்டு வெளிவந்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும்.
Previous Post Next Post

Contact Form