இந்த எளிய நுட்பம் உங்கள் எழுத்து ஆற்றலை அதிகரிக்க உதவும்
எழுத்து என்பது பல விஷயங்களைப் பற்றியது, வார்த்தைகளை காகிதத்தில் பதிவிடுவது மட்டுமல்ல. உங்கள் எழுத்து திறனை மேம்படுத்த ஒரே ஒரு வழிதான் உண்டு - "நீங்கள் தினமும் எழுத வேண்டும்."சமீபத்தில் நான் எழுதும் ஒரு கதையை என்னால் தொடர முடியாமல் போனது. காரணம், எனது சிந்தனைகள் ஒரே இடத்தை சுற்றி வளம் வந்தன. அதிலிருந்து மீள்வது என்பது கடினமாக இருந்தது.
நான் இத சொல்ல காரணம், எவ்வளவு தான் எழுதினாலும் சில சமயங்களில் சிந்தனையிலோ அல்லது கனவுலகத்திலோ எளிதில் தொலைந்து போகலாம்.
அப்படியான தருணத்தில், எப்படி மீண்டும் தெளிவான நிலைக்கு வந்து எழுத்தில்/கதையில் கவனம் செலுத்துவது?
இந்த மாதிரியான சமயத்தில் நான் திரைப்பட இயக்குனர்/எழுத்தாளர் Quentin Tarantino (குவென்டின் டரான்டினோ) அறிவுரையை பின் பற்றுவேன்.
இதோ Quentin Tarantino (குவென்டின் டரான்டினோ) வின் அறிவுரை:
"நான் எழுதும்போது அது திரைப்படத்தைப் பற்றியதோ, சினிமா பற்றியதோ அல்லது எதையும் பற்றியது அல்ல. மாறாக, நான் எழுதும்போது அது குறிப்பிட்ட பக்கத்தைப் பற்றியது. என் பேனாவை உபயோகித்து காகிதத்தில் ஒரு நல்ல பக்கத்தை எழுதி அதை ஒரு இலக்கிய ஆவணமாக முதலில் உருவாக்குவதே என் நோக்கம். இதுவே எனது முதல் கலைப் பங்களிப்பு, ஸ்கிரிப்ட் முடிவதற்குள் நான் என் வேலையைச் சரியாகச் செய்தால், எனது எழுத்து/கதை உறுதியான படைப்பாக வெளிவரும்." - Quentin Tarantino (குவென்டின் டரான்டினோ)
நான் Quentin Tarantino (குவென்டின் டரான்டினோ) வின் அறிவுரையுடன் உடன்படுகிறேன், அவருடைய ஆலோசனை மிக உபயோகமானது.
ஏன் என்றால், இறுதியில், ஒரு கதையின் நோக்கம் எப்போதுமே வாசகரின் ஆர்வத்தை தூண்டுவதே. அப்படி வாசகர் பக்கத்தைத் திருப்பவில்லை என்றால், கதையில் என்ன பயன்?
Tags:
Tamil