காருக்குள் ஒரு இளம்பெண்

காதலுக்கு எது மிக முக்கியம்?
 

நள்ளிரவு. 

யாரும் இல்லாத பாஸ்ட் புட் டிரைவ்-த்ரூ (fast-food drive-through). 
ஒரு கார் உள்ளே நுழைகிறது.

காருக்குள் ஒரு இளம் பெண் டிரைவிங் சீட்டில் சோகமாக அமர்ந்திருக்கிறாள். கண்ணீரால் அவளின் கண்மை உருகுகிறது. அவளின் பெயர் ஆராதனா.

இண்டர்காமில் இருந்து ஒரு குரல்!

வெயிட்டர்: Hi sir, order சொல்லுங்க…

ஆராதனா அமைதியாக இருக்கிறாள்.

வெயிட்டர்: Sir…?

ஆராதனா: Hi…

வெயிட்டர்: Hi madam, order சொல்லுங்க…

திடீரென… ஆராதனா அழுகிறாள்.

வெயிட்டர்: Madam? ஏதும் பிரச்சனையா?

மெளனம். ஆராதனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

வெயிட்டர்: Are you okay, madam…?

ஆராதனா: இல்ல. I’m not okay.

வெயிட்டர்: யாருக்காச்சும் call பண்ணட்டா?

ஆராதனா கண்ணீரைத் துடைக்கிறாள்.

ஆராதனா: கவலபடாதீங்க, நா தற்கொலை பண்ணிக்க மாட்டே(ன்). மனசு சரில… I’m just broken. அவ்ளோ தா.

வெயிட்டர்: ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?

ஆராதனா: 
ஒங்களுக்கு எதுக்கு அக்கற?

வெயிட்டர்: இல்ல… உங்க voice வச்சு பாக்கும் போது இரக்கமான மனுஷனா தெரிரீங்க, அதான் கேட்டே(ன்).

ஆராதனா: உங்க timeம waste பண்ண விரும்பல. நா கெலம்புரே(ன்).

வெயிட்டர்: இந்த நேரத்துல யாரும் வரமாட்டாங்க. மனசுல இருக்குறத சொல்லுங்க… I can listen.

ஆராதனா : Are you sure?

வெயிட்டர்: யாரவது ஒருத்தங்க நம்மள judge பண்ணாம, நம்ம மனசுல இருக்குற கஷ்டத்த கேக்குறதோட அரும எனக்கு தெரியு(ம்). ஆமா. I’m sure. சொல்லுங்க.

ஆராதனா ஒரு வினாடி யோசிக்கிறாள்.


ஆராதனா: I’m very lonely. இந்த தனிம என் controlலையும் மீறி ரொம்ப நாள் நீடிக்கிது. அஞ்சு வருஷம் ஆச்சு நா ஒரு serious relationshipல இருந்து. நா ஒன்னு என்ன காப்பாத்த எந்த ஒரு அரசனையோ இல்ல மன்மதனையோ தேடல… நா அப்படிப்பட்ட பொண்ணும் இல்ல. என்ன காப்பாத்திக்கிக்க எனக்கு தெரியு(ம்). ஆனா…
வெயிட்டர்: ஆனா?

ஆராதனா: காதல் and intimacyங்கிறது வாழ்க்கைக்கு தேவ. நா care பண்ண எனக்கு ஒரு partner தேவ. எப்படி நம்மக்கு கிடைக்கிற careரும் அன்பும் நம்மள திருப்தியா வெச்சிருக்குமோ… அதே மாதிரி careரையும் அன்பையும் கொடுக்கும் போதும் நம்மக்கு ஒரு திருப்தி கெடைக்கும். I want that. I want to take care of someone.

வெயிட்டர்: Hmmm…

ஆராதனா: வெறுப்பா இருக்கு. சரியான ஒரு matchக்கு wait பண்ணி பண்ணி வெறுத்துட்டே(ன்). காதல்ல சரியான matchன்னு ஒன்னு கிடையாது. அது யதார்த்தமு இல்ல.

வெயிட்டர்: நா ஒன்னு கேட்டா கோச்சிக்க மாட்டீங்களே?

ஆராதனா: கேளுங்க…

வெயிட்டர்: ஒரு relationshipல எத நீங்க பெருசா  மதிக்கிறீங்க?

ஆராதனா: அது relationshipப பொறுத்தது.

வெயிட்டர்: இது ஒரு simple ஆன கேள்வி. simple ஆன பதிலா சொல்லுங்க.

ஆராதனா ஒரு கணம் யோசிக்கிறாள்.


ஆராதனா: ஒங்களுக்கு யாராச்சும் இருக்காங்களா? Girlfriend?

வெயிட்டர்: இல்ல.

ஆராதனா: எப்பயாச்சும் girlfriend இருந்திருக்கா?

வெயிட்டர்: ஆமா, school படிக்கும் போது.

ஆராதனா: அது ரொம்ப ரொம்ப நாளைக்கு முன்னாடி.

வெயிட்டர்: ஆமா, ரொம்ப நாளைக்கு முன்னாடி தா(ன்). ஆனா, இது நா தேர்ந்தெடுத்தது… I’m single by choice. நா lower middle class, நா சம்பாரிக்கிறது எனக்கே பத்தல… இதுல என்னோட சேந்து ஒரு பொண்ணையும் கஷ்டப்படுத்த விரும்பல.

ஆராதனா: Okay. ஒங்களுக்கு ஒரு girlfriend இருக்கிற மாதிரி கற்பன செஞ்சு பாருங்கள். இப்ப அந்த relationshipல எத நீங்க பெருசா மதிக்கிறீங்க?

வெயிட்டர் அமைதி காக்கிறார்.

வெயிட்டர்: இப்போ என் வாழ்க்கைல நா தேடுறது “அமைதி” மட்டுந்தா… நா தேடுறது அவ்ளோதான்.
அவரது பதிலில் ஆராதனா ஈர்க்கப்பட்டாள்.

வெயிட்டர்: Okay. இப்ப நீங்க சொல்லுங்க. ஒரு relationshipல எத நீங்க பெருசா மதிக்கிறீங்க?
அவள் முகத்தில் ஒரு புன்னகை, ஒரு தெளிவு பெற்ற புன்னகை.

ஆராதனா: இவ்ளோ நாளா நா தேவையில்லாத விஷயத்த நோக்கி போய்ட்டு இருந்தே(ன்). ஓங்கோளோட பதில் என் கண்ண திறந்திடுச்சு.
வெயிட்டர்: புரியல.

ஆராதனா: என்னோட எந்த relationshipபும் work ஆகத்துக்கு காரணம், நா எப்பயுமே ஒரே type ஆனா boysஅ காதலிக்கிறது தா(ன்). நா இன்னுமு அதுல இருந்து எதுவு(ம்) கத்துக்கள. ஓங்கோளோட பதிலுக்கு அப்பறந்தான் நா realize பண்ணே… என்னோட தேவ எதுன்னு நா மொதல்ல புரிஞ்சிக்கணு.

வெயிட்டர்: நா அப்படி ஏதும் mean பண்ணல.

ஆராதனா: That’s okay. But உங்க பதில் என்ன inspire பண்ணுச்சு. Thanks.

வெயிட்டர் புரியாமல் அமைதி காக்கிறான்.


வெயிட்டர்: நா ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்களே?
ஆராதனா: கேளுங்க…

வெயிட்டர்: Can I take you out for a coffee?

ஆராதனா: Like a date?

வெயிட்டர்: ஆமா, like a date.

ஆராதனாவின் முகத்தில் ஒரு புன் சிரிப்பு.

ஆராதனா: That’s very sweet.
வெயிட்டர் உற்சாகமாக கேட்கிறான்

வெயிட்டர்: உங்க பதில் “yesனு” ஏத்துக்கலாமா?
ஆராதனா: இல்ல. நா இப்போதைக்கு எந்த relationshipயும் தேடல. என்னக்கு என்னோட single life புடிச்சிருக்கு. என்னோட மனசு இப்போ பராமா இல்ல. என்னோட பிரச்சனைய கேட்டதுக்கு thanks. You are a good guy.

கார் புறப்படுகிறது. ஆராதனா வேகமாக அந்த இடத்தில இருந்து செல்கிறாள்.


வெயிட்டர்: மேடம்?

வெயிட்டருக்கு அவள் சென்றது இன்னும் புரியவில்லை.

வெயிட்டர்: மேடம்? ஏன் அமைதியா இருக்கீங்க?
சிறிது நேரம் கழித்து, வெயிட்டர் ஆராதனா சென்று விட்டாள் என்பதை புரிந்து கொள்கிறான்.

பின்…

தனியாக அமர்ந்து, அவன் அடுத்த வாடிக்கையாளருக்காக காத்திருக்கிறான்.

அவன் காத்திருக்கிறான்.

அவன் காத்திருக்கிறான்.

அவன் காத்திருக்கிறான்.


Previous Post Next Post

Contact Form